“பேச தெரியாம பேசிகிட்டு இருக்காங்க, இது சரி இல்ல..,” – கோபிநாத்தை வம்புக்கு இழுத்த முக்கிய பிரபலம்!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவனை, மட்டமாக பேசிய சர்ச்சை விவகாரத்தில், முக்கிய பிரபலம் ஒருவர் அந்த மனைவிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள், அவர்களின் கணவர்கள் ஆகியோர் குறித்த விவாதம் நடந்தது.


அதில் பங்கேற்ற மனைவி ஒருவர், கணவருக்கு படிக்கத் தெரியாது என்றும், குழந்தையின் progress ரிப்போர்ட்டை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார் என ஏளனமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த கோபிநாத், இப்படிப்பட்ட கணவரை உடனே பாராட்டி பரிசு கொடுக்கிறேன் என அதிரடி காட்டினார். தற்போது, கணவரை கிண்டலாக பேசிய அந்த மனைவியை நெட்டிசன்கள்  விளாசி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது, அந்த மனைவிக்கு ஆதரவு தரும் விதமாக பாடலாசிரியர் தாமரை முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பெண்கள் இவ்வளவு கண்டிப்புடன் இருந்தால் தான் குடும்பம் முன்னேறும். அவர் பேசத் தெரியாமல் பேசிவிட்டார் அவ்வளவுதான். இங்கே கோபிநாத் நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருக்கும்போது அந்தப் பெண், குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து progress ரிப்போர்ட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பார் என கோபிநாத்தையும் வம்பிழுத்துள்ளார் . தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here