நம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் – நீட் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா!!

0
நம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் - நீட் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா!!
நம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் - நீட் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா!!

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு நிரந்தர தீர்வாக அமையாது என நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் குறித்து நடிகர் சூர்யா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

உருக்கமான பதிவு:

மத்திய அரசு நடத்தக்கூடிய மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த தேர்வு தேவையில்லை, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்தலாம் என்பது தமிழக அரசின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், பிடிவாதமாக உள்ள மத்திய அரசு நீட் தேர்வை கைவிடும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக மறுத்து விட்டது.

நம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் - நீட் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா!!
நம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் – நீட் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா!!

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வெழுதினர். ஆனால், ஒரு சில மாணவர்கள் இந்த தேர்வில் ஏற்படும் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வை முடித்து மதிப்பெண்கள் குறைந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடிகர் சூர்யா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, மாணவர்களின் உயிரை விட தேர்வு ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றும், எந்த ஒரு கவலையானாலும் சில காலத்திற்கு பிறகு குறைந்துவிடும். அது மட்டுமில்லாமல், மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருப்பது அவசியம் எனவும் தெரிவித்தார். அதுபோல, தானும் பல்வேறு தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளதாகவும், மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்கள் கூட மனம் விட்டு பேசுமாறு மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தி உள்ளார். மேலும், தற்கொலை என்பது உங்களை பிடித்தவர்களுக்கு நீங்கள் தரும் வாழ்நாள் தண்டனை என பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here