
மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) ஐ நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நீட் தேர்வானது, இந்தியாவில் உள்ள தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடந்த மே 7ம் தேதி நடத்தப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால், மணிப்பூரில் மட்டும் உள்ளூரில் நடைபெற்ற கலவரம் காரணமாக நீட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீட் தேர்வு எழுதி உள்ளவர்கள் ரிசல்ட் எப்போது வரும் என எதிர்நோக்கி உள்ளனர். இவர்களுக்கான ரிசல்ட் குறித்து கடந்த 17ம் தேதி NTA முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்து இருந்தது. அதாவது, மணிப்பூரில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நடந்து முடிந்த பிறகு ரிசல்ட் குறித்த அப்டேட்டை வெளியிடும் என கூறியிருந்தது.
இதனிடையே, தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது, இந்த பொறியியல் படிப்பில் சேர்ந்த பின் நீட் ரிசல்ட் வெளிவந்தால், நிஜமாகவே பொறியியல் சேர்ந்து படிக்க விருப்புமும் மாணவர்களுக்கான இடம் பாதிக்கப்படும். இதனால், தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பாதிப்பை தவிர்க்க, நீட் தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்கள் மற்றும் மெடிக்கல் சீட் கிடைக்கும் என உறுதியாக நம்புபவர்கள், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து பிறகு, விலக வேண்டாம் என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.