நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு  செய்ய நீதிபதி குழு – முதல்வர் உத்தரவு!!!

0

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

நீட் தேர்வு:

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு ஆண்டு தோறும் நடைபெறும்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆகவே கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இந்த குழு அமைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here