நீட் தேர்வால் மற்றொரு சோகம் – காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!

0
நீட் தேர்வால் மற்றொரு சோகம் - காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!
நீட் தேர்வால் மற்றொரு சோகம் - காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!

நீட் தேர்வை எழுதி முடித்த வேலூர் காட்பாடியைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா, மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உயிரிழப்பு:

மத்திய அரசு நடத்த கூடிய மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த இரு தினங்களுக்கு முன் நடத்தப்பட்டது. இதில், தமிழக மாணவர்கள் இந்த தேர்வை மிகச்சிறப்பாக எழுதியதாகவும், கேள்வித்தாள் எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தனர். மேலும், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 84% வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெற்றதாக கல்வியாளர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். இது மட்டுமில்லாமல், இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வால் மற்றொரு சோகம் - காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!
நீட் தேர்வால் மற்றொரு சோகம் – காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!

இந்த நிலையில், தேர்வு நடக்கும் முன்பே தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இவர் இதற்கு முன்பு இரண்டு முறையும் தேர்வெழுதி தோற்று போயிருந்ததால், இந்த முறை தற்கொலை முடிவை எடுத்ததாக தகவல் வந்தது. இதே போல், நீட் தேர்வை எழுதி முடித்த அரியலூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கனிமொழி, தேர்வு முடிந்த நாள் முதல் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் நேற்று தகவல் வந்தது.

நீட் தேர்வால் மற்றொரு சோகம் - காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!
நீட் தேர்வால் மற்றொரு சோகம் – காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா உயிரிழப்பு!!

இதில், தற்போது நீட் தேர்வை முடித்த வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த மாணவி சௌந்தர்யா, மதிப்பெண் குறைந்து விடுமோ? என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. மாணவர்களின் தொடரும் இந்த தற்கொலை முடிவுகள் தமிழகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, எதற்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என தெரிவித்த அரசு இந்த எண்ணத்தில் இருந்து மீள 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here