நீட் 2021 தேர்வு தேதி வெளியானது – நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
நீட் 2021 தேர்வு தேதி வெளியானது - நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
நீட் 2021 தேர்வு தேதி வெளியானது - நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

நீட் தேர்வுக்கான தேதிகள் மற்றும் தேர்வு மையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.கொரோனா 2வது அலை காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பல்வேறு மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டன. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தனர் ஆனால் தேர்வின் விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன.

2021 நீட் தேர்வு தேதி…

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்காக சேரும் மாணவர்களுக்கு இந்திய அளவில் நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறும். என்னதான் அதிக மதிப்பெண் பெற்றாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பை படிக்க முடியும். இந்த நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வந்தன. அதுமட்டுமில்லாமல் தமிழக்த்தில் அனிதா போன்ற ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவ படிப்பை படிக்கச் முடியாததால் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகளினால் நீட் தேர்வின் எதிர்ப்புகள் இன்னும் அதிகம் ஆகின, இதற்கிடையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதன்பின் 2020 செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பின் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்று கூறியது.

நீட் தேர்வு எதிர்ப்புகள்
நீட் தேர்வு எதிர்ப்புகள்

ஆட்சி அமைத்தபின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்தநேரத்தில் நீட் தேர்வுக்கான தேதி வெளி வந்துளளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் எதுவும் தொடங்கவில்லை. கொரோனாவின் பரவல் தொற்றால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் தேர்வுக்கான பயிற்சிகள் எடுப்பதில் சிரமமாக உள்ளது எனவும் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், நீட் தேர்வை கொஞ்சம் நாட்களுக்கு பின் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

2021 நீட் தேர்வு தேதி...
2021 நீட் தேர்வு தேதி…

எனவே இதை மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. பின் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நாளில் நடத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் நோய் தொற்று இருப்பதால் சமூக இடைவெளி வேண்டும் எனவே 155 ஆக இருந்த தேர்வு மையங்களை 198 ஆக அதிகரிக்கபடும். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் விதிமுறைகளை பின்பற்றி பின்பற்றி நீட் தேர்வு நடத்தப்படும். நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கப்படும் என்றும் கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here