ஒலிம்பிக் ஹீரோ மட்டும் இல்ல.. இனி டயமண்ட் ஹீரோவும் நீரஜ் சோப்ரா தான் – தங்க மகனின் புதிய சாதனை!

0
ஒலிம்பிக் ஹீரோ மட்டும் இல்ல.. இனி டயமண்ட் ஹீரோவும் நீரஜ் சோப்ரா தான் - தங்க மகனின் புதிய சாதனை!
ஒலிம்பிக் ஹீரோ மட்டும் இல்ல.. இனி டயமண்ட் ஹீரோவும் நீரஜ் சோப்ரா தான் - தங்க மகனின் புதிய சாதனை!

டயமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

தங்க மகன் நீரஜ் சோப்ரா!!

சுவிட்சர்லாந்து நாட்டின் சுவிட்ச் நகரில் டயமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றின் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

24 வயதான இந்திய சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா இதற்கு முன்னர் ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். நீரஜ் சோப்ரா மூன்றாவது முறையாக டயமண்ட் லீக் தடகள போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

இவருடன் போட்டியிட்ட சக வீரர்களில் செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் 86.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தையும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 83.73 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.டயமண்ட் லீக்கில் பட்டத்தை வென்ற தங்க மகனுக்கு இந்திய தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here