ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.., இந்த ஆண்டும் சாதனை படைப்பேன்.., பளீச் பேட்டி!!!

0
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.., இந்த ஆண்டும் சாதனை படைப்பேன்.., பளீச் பேட்டி!!!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.., இந்த ஆண்டும் சாதனை படைப்பேன்.., பளீச் பேட்டி!!!

வெகு ஆண்டுகளாக ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுமா? என ஏங்கிய இந்திய மக்களுக்கு தற்போது இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதனால் இவர்களின் திறமைகளை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இந்த ஆண்டு ஈட்டி எறிதலில் உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, டைமண்ட் லீக் போன்ற சர்வதேச போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதனால் 2020 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் வீசி உலகின் நம்பர் 1 வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய இலக்கை எட்ட உள்ளார்.

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ்: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய இளம் வீராங்கனை!!

இது குறித்து பிரபல வீரர் நீரஜ் சோப்ரா கூறுகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள அனைத்து சர்வதேச போட்டிகளிலும் வெற்றி பெறுவேன். மேலும் ஈட்டி எறிதலில் “மேஜிக்கல் மார்க்” எனப்படும் 90 மீட்டர் தூர இலக்கை நிச்சயம் அடைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சாதனையை அடைந்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here