தன் பெற்றோரின் கனவை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா – வைரலாகும் விமானத்தில் பறக்கும் புகைப்படங்கள்!!

0

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய நீரஜ் சோப்ரா தன் பெற்றோர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வென்று கொடுத்து நாட்டை பெருமை படுத்திய வீரர் நீரஜ் சோப்ரா. அதுமட்டுமல்லாமல் 120 ஆண்டு இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற வரலாறு படைத்தார்.

இவரின் இந்த சாதனை மூலம் உலகத் தரவரிசையில் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பல மாநில அரசுகள் நீரஜ் சோப்ராவிற்கு பரிசுகளை அறிவித்தன. மேலும் நீரஜ் சோப்ராவின் விளம்பர ஒப்பந்தங்களின் மதிப்பு, 10 மடங்கு அதிகரித்து விட்டதாக குறைப்படுகிறது. இந்திய தனிநபர் விளையாட்டில் இது மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு தன் பெற்றோர்களை விமானத்தில் பயணம் செய்ய வைக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்துள்ளது. தற்போது அந்த கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளார். இவர் தன் பெற்றோரை விமானத்தில் அழைத்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here