கல்யாணத்துக்கு பிறகும் அழகில் குறையாத நஸ்ரியா …! – கணவருடன் நஸ்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ !!!

0

மலையாள மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நம்ம தேவதை நடிகை நஸ்ரியா நசீம் அவர்கள். நஸ்ரியா திரைப்படங்களில் நல்லதொரு நடிகையாக வலம் வரும் நிலையிலையே  திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் தன்னை இணைத்து கொண்டவர். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை நஸ்ரியா அவர்கள். அதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாகவும் மலையாள மொழி  படங்களில் நடித்து உள்ளார். பின்பு தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார். நேரம் என்ற படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தவர். அதை தொடர்ந்து  தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் இவரின் பல படங்களில் தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு பகத் பாசில் என்ற மலையாள நடிகருடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் பகத் பாசில் பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். இவரின் அப்பா ஒரு இயக்குனர் ஆவார். நடிகர் பகத் பாசில் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து  உள்ளார். தற்போது நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கணவனின் தோளில் சாய்ந்தபடி உள்ள அழகிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here