இவர் தான் என் பேவரைட் ஹீரோ.. ரசிகர்களிடம் போட்டோவை பகிர்ந்த நஸ்ரியா!!

0

நஸ்ரியா நசீம், தன் கணவருடன் எடுத்த லேட்டஸ்ட் செல்பியை பகிர்ந்து உங்களின் மிகப்பெரிய ரசிகை நான் என்று பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் பாசிடிவ் ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

மலையாள சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பலங்கு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். பின்னர் சின்ன திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வெள்ளித்திரையில் கதநாயகியாக தோன்றினார். தமிழில் நிவின் பாலியுடன் நேரம் படத்தில் அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே நஸ்ரியாவின் கியூட்டான ரியாக்ஷன்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியது.

அதை தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 2014 முன்னனி நடிகரான பஹத் பாசிலை திருமணம் செய்து சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் விட்டவர் தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ளார். இந்நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் தான் இருக்கும் போட்டோவை பகிர்ந்து “நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. ஒவ்வொரு நாளும் நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்” என தலைப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here