மீண்டும் ராஜா ராணி கீர்த்தனாவாக மாறிய நஸ்ரியா.. வெளிவந்த கியூட் லுக் புகைப்படங்கள்!!

0

தமிழில் மிக குறைந்த அளவிலான படங்கள் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருப்பவர் நஸ்ரியா நசீம். இவர் நடிப்பை தாண்டி இவர் செய்யும் கியூட்டான முக பாவனைகளுக்கே இவருக்கு ரசிகர் கூட்டம் உண்டு.

nazriya

சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய நஸ்ரியாவிற்கு பலுங்க்கு என்ற மலையாள படம் மூலம் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்திலேயே இவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்ததால் சிறிது காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார்.

அதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் வாயை மூடி பேசவும், நையாண்டி, ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார். பின்னர் மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு சிறிது பிரேக் விட்ட இவர், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இவர் வீட்டில் தூங்கி கண் விழித்ததும் ராஜா ராணி படத்தில் ஆட்டம் போடும் கீர்த்தனா கெட்டப்பில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவிற்கு ‘சண்டே மூட்’ என தலைப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here