நயன்தாராவின் அந்த ஆறாவது விரலில் அப்படி என்ன உள்ளது?? வெளியான ரகசியம்!!

0

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்தவர் நயன்தாரா. பல ஹிட் படங்களை கொடுத்து தொடர்ந்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். தற்போது நயன்தாரா பற்றிய ஒரு செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது அவரது 6 வது விரலை பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர்.

நயன்தாரா

கேரளா பெண்ணான நயன்தாரா ‘ஐயா’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். மேலும் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் அவருக்கென்று திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க சில காலம் ஆக தான் செய்தது. மேலும் இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கத்தான் தான் செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார் நயன்தாரா. எடுத்த எடுப்பிலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. நயன்தாராவும் சிம்புவும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் வெளியாகின. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமணம் ஆகாமலே வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் பரவின. இதனால் பிரபுதேவா குடும்பத்திற்கும் நயன்தாராவிற்கும் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பிறகு பிரபுதேவாவையும் பிரிந்தார் நயன்தாரா. இவ்வாறு தொடர்ந்து பல அடிகளை வாழ்க்கையில் சந்தித்தவர். அதன் பிறகு தனது கேரியரில் முழுகவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.

அரைகுறை ஆடையுடன் தலைகீழாக போஸ் கொடுத்த அமலா பால்!!

அடுத்தடுத்த பல வெற்றி படங்களை குவித்து வந்தார். பல போட்டி நடிகைகளுக்கு மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். தொடர்ந்து முன்னணி நடிகைர்களுடன் ஜோடி சேர்ந்தும் நடித்தார். அதற்குமேல் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் செம ஹிட் அடித்தது. அதற்கு மேல் தற்போது அவர் நடித்து முடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் டீஸர் அனைவரையும் மிரட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நயன்தாராவை பற்றிய ஒரு தகவல் வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது அவரது 6 வது விரலை பற்றி தான். இது ஹிந்தி நடிகரான ரித்திக் ரோஷனுக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6வது எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரல் நயன்தாராவின் பாட்டிக்கு கூட இருக்குமாம். அதனாலேயே செண்டிமெண்ட்டாக வைத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here