லேடி சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரும் ஸ்பைடர் பட நடிகர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!!

0

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள். இவர் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் மகேஷ் பாபுக்கு ஜோடியாக படம் நடிக்க  உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த செய்தி அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனசினகாரே என்ற மலையாள மொழி படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு தன் நடிப்பு திறமையால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு உயர்ந்தவர். தமிழ் தவிர பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். திரைத்துறையில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரின் பல படங்கள் வசூல் சாதனைகளை படைத்தவை. மேலும் அவருக்கு தெலுங்கு மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர்.

தற்போது நடிகை நயன்தாரா தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர உள்ளார். அளவைகுண்டபுரம்லோ என்ற வெற்றி படத்தை இயக்கிய திரி விக்ரம் இயக்கத்தில் இந்த ஜோடி முதன் முறையாக இணைய உள்ளது. இரண்டு நாயகிகளில் ஒருவராக நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here