இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் – திருமண நாளில் முக்கிய சேவை செய்த நயன் விக்கி!!

0
இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் - திருமண நாளில் முக்கிய சேவை செய்த நயன் விக்கி!!
இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் - திருமண நாளில் முக்கிய சேவை செய்த நயன் விக்கி!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணத்தை அடுத்து, ஆதரவற்றோருக்காக நயன்தாரா செய்துள்ள முக்கிய சேவை ஒன்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

குவியும் பாராட்டு :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்கள் 7 வருட காதல் பந்தத்தை அடுத்து, இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இன்று காலை 8.30 மணி அளவில் இவர்களது திருமணம், மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இன்று மதியம் இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் உள்ளிட்ட பலரும் ஜோடியை வாழ்த்த நேரில் சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருமண சடங்குகள் ஒருபுறம் பிஸியாக நடந்தாலும், நயன்தாரா ஆதரவற்றோர்க்காக செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, தங்கள் திருமண நாளை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு, நயன்தாரா சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் நீங்கள் ரியலிலும் லேடி சூப்பர் ஸ்டார் தான் எனக்கூறி வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here