நயன் விக்கி திருமணம்: படையெடுத்த இந்திய திரையுலகம் – பங்கேற்றவர்களின் முழு லிஸ்ட் இதோ!

0

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு வரிசையாக அனைத்து திரையுலக பிரபலங்களும் படையெடுத்துள்ளனர்.

நயன்தாராவின் திருமணம்:

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்து இன்றிலிருந்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. திருமணத்திற்கான ஒவ்வொரு வேலைகளையும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பார்த்து பார்த்து தனித்துவமாக செய்துள்ளனர்.

திருமணத்திற்கு வரும் யாருமே புகைப்படங்கள் எடுக்க கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், திருமணத்திற்கு திரையுலக நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களை அழைத்திருந்தனர். பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் வரிசையாக திருமணத்திற்கு வந்தபடியே உள்ளனர். நடன இயக்குனர் கலா மாஸ்டர் தனது கணவருடன் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சரத்குமார் மற்றும் ராதிகா, இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி, ரஜினிகாந்த், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் அட்லி மற்றும் பலர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இதனையடுத்து பிகில் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ரெபா மோனிகா ஜானும் தனது கணவருடன் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here