நயன்தாராவை வச்சு விக்னேஷ் சிவன் செய்த காரியம்.., பரவாயில்லையே.., நல்ல முயற்சி தான்

0
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!

கோலிவுட்டில் ட்ரெண்டிங் ஜோடியாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் “கல்யாணம் ஆனாலும் ஆனுச்சு மனுஷன் இப்படி மாறிட்டாரே” என ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டு மழைகளை பொலிந்து வருகின்றனர் .

விக்னேஷ் சிவன்- நயன்தாரா

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இந்த இருவரும் பல வருட காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துகொண்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர்கள் அதற்கு பிறகு பல நாடுகளுக்கு சென்று வரும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது சோசியல் மீடியாவில் எங்கு சென்றாலும் இவர்களின் ரொமான்டிக் புகைப்படங்கள் தான். இந்நிலையில் விக்கி தற்போது நயன்தாராவை வைத்து ஒரு டிவி விளம்பரத்தை இயக்கி இருக்கிறார். ஒரு பிரபல பிராண்டின் விளம்பரத்தில் நயன் நடித்த நிலையில் அதை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.

அதை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ள விக்னேஷ் சிவன் ‘இதுதான் என் முதல் டிவி விளம்பரம்’ என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அஜித் படத்தை இயக்கும் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் டிவி விளம்பரத்தை கூட இயக்கும் அளவுக்கு சென்றுவிட்டார் என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here