ஹனிமூன்னுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது – நயன்தாராவின் முடிவால் அதிர்ந்த விக்னேஷ் சிவன்!

0
ஹனிமூன்னுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது - நயன்தாராவின் முடிவால் அதிர்ந்த விக்னேஷ் சிவன்!

மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததும் ஹனிமூன் செல்வார்கள் என எதிர்பார்த்த சமயத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என நயன்தாரா கூறியுள்ளார்.

ஹனிமூன்க்கு நோ:

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் காலை 8:30 மணியளவில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் அனைவருமே நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டு ஆசிர்வதித்துள்ளனர்.

மேலும், நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. அதாவது திருமணத்தின் போது யாருமே மொபைல் போனில் படம் பிடிக்க கூடாது என அறிவித்திருந்தனர். மேலும், திருமணத்தில் கொடுக்கப்படும் வாட்டர் பாட்டில்களில் கூட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புகைப்படம் பதித்து தனித்துவமாக கொடுத்தனர். சாதாரணமாக திருமணத்தை நடத்தாமல் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்துவமாக செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஹனிமூன்க்கு வெளிநாடு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நயன்தாராவிற்கு எக்கச்சக்க திரைப்பட கமிட்மென்ட் இருப்பதால் தற்போதைக்கு ஹனிமூன் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாது என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here