அட நயன் – விக்கி Honeymoon போகல பாஸ் – பாரின் Trip-க்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்!

0
அட நயன் - விக்கி Honeymoon போகல பாஸ் - பாரின் Trip-க்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பாரின் ட்ரிப் தற்போது சென்றுள்ள நிலையில் அதற்கான உண்மையான காரணம் வெளியாகியுள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பிரபல இயக்குனர் ஹரி இயக்கிய ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக நயன்தாரா அறிமுகமாகினார். மேலும் முதல் படத்திலேயே மக்களின் வரவேற்பை பெற்று தற்போது வரை முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக காதலித்து கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மாதம் ஹனிமூனுக்கு தாய்லாந்துக்கு சென்றனர் இந்த தம்பதி. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த தம்பதி பாரினுக்கு சென்றுள்ளனர். அதாவது விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62-வது படத்தை இயக்கவுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பார்சிலோனாவுக்கு சென்று உள்ளனராம். இந்த பயணத்தை படத்துக்காகவும் மற்றும் தனிப்பட்ட விஷயத்துக்காவும் நயன் விக்கி பயன்படுத்திக்கொண்டனர். மேலும் சில நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இரண்டாவது முறையாக ஹனிமூன் கொண்டாடி உள்ளனர் என இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here