லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா…ட்விட்டரில் நயன்தாரா ட்ரெண்டிங்..இதான் காரணம்!!!  

0

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இருந்து  ‘இதுவம் கடந்து போகும்’ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா தற்போது நடித்திருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். இது அவருக்கு 65 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தென்கொரியாவில் வெளியான Blind திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Blind திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. விபத்தில் பார்வையை இழக்கும் பெண் போலீஸ் அதிகாரி எப்படி ஒரு சைக்கோ கொலைகாரனை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது இப்படத்தின் கதை.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ’இதுவும் கடந்து போகும்’ பாடல் இன்று வெளியானது. சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து ட்விட்டரில் நயன்தாரா ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here