தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா – கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயனதாரா. இந்த வருடத்தில் அவருக்கு வெளியான அனைத்து படங்களும் டாப் ஹிட் அடுத்ததால் ஒரே அடியாக தனது சம்பளத்தை அதிகரித்துளார். ஹிந்தி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு இருந்த இவரின் சம்பளத்தை கேட்ட பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருக்கிறார் நயன்தாரா. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் திறன் படைத்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில காலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தனி நாயகியாக அந்த படத்தில் கலக்கி இருப்பார். அடுத்து அவரின் பிறந்தநாளில் வெளியான நெற்றிக்கண் படத்தின் டீஸர் அனைவரையும் அலறவைத்தது.

இதுவரையிலும் இல்லாத விதமாக நயன்தாரா நடித்திருக்கிறார். பார்வை தெரியாத பெண்ணாக அந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். நயன்தாராவிற்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமையப் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதுவரையிலும் ஹிட் படங்களையே கொடுத்து வந்ததால் அவரின் சம்பளத்தையும் ஏற்றியுள்ளதாக தகவல் வெளியானது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – முக ஸ்டாலின் நலம் விசாரிப்பு!!

ஏற்கனவே சம்பள பட்டியலில் முதன்மை இடத்தை பிடித்தவர் நயன்தாரா. 4 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பிறகு 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இந்த தகவலை கேட்ட பலரும் ஷாக்காகி உள்ளனர். ஹிந்தி நடிகைகள் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லையாம். மேலும் படங்களில் கமிட் செய்ய நயன்தாராவை கேட்ட போது கேட்டதை கொடுத்தால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here