திருமணத்திற்கு பின் நயனின் முதல் படம் – 7 வயது மகனுக்கு தாயான லேடி சூப்பர் ஸ்டார்!  O2 படம் எப்படி இருக்கு??

0
திருமணத்திற்கு பின் நயனின் முதல் படம் - 7 வயது மகனுக்கு தாயான லேடி சூப்பர் ஸ்டார்!  O2 படம் எப்படி இருக்கு??

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகி ஹாட்ஸ்டாரில் வெளியான O2 திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

 முழு விமர்சனம்  :

கணவனை இழந்த விதவை பெண்ணாகவும், 7 வயது குழந்தைக்கு தாயாகவும் இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். பிரபல யூடியூப் புகழ் ரித்விக் அவரது ஒரே மகனாக நடித்துள்ளார். தன் மகனுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசித்து வருகிறார். இதையடுத்து, தன் மகனுக்கு ஆபரேஷன் செய்வதற்காக, நயன்தாரா ஒரு ஆம்னி பஸ்சில் கோயம்புத்தூர் வருகிறார்.

வரும் வழியில், நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து விபத்தில் சிக்கிக் கொள்கிறது. நிலச்சரிவில் சிக்கி கொண்ட பலரும், ஆக்சிஜன் பெறுவதற்காக ரித்விக் கிடம் இருக்கும் சிலிண்டரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால், சிலிண்டர் இல்லாமல் தன் மகனால்  உயிர் வாழ முடியாது என்பதால் ஆக்சிஜன் சிலிண்டருக்காக போராடுகிறார். இந்த நிலையில், தன் மகனை நயன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதைக்களம்.

தாய் மகன் மீதான பாசம் குறித்து, அழகான கதையை தேர்வு செய்த இயக்குனர், படத்தின் கதையை திறம்பட அமைக்க தவறிவிட்டார். மிகப்பெரிய நடிகையான லேடி சூப்பர் ஸ்டாரை அவர் நன்றாக பயன்படுத்தவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் ரித்விக் நடிப்பு சூப்பர் என்றும், ஒரு தடவை படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு அமையவில்லை என, ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here