Thursday, April 25, 2024

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Must Read

தமிழ் திரையுலகில் “லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

“லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாரா:

தமிழ் திரையுலகை பொறுத்தவரை எப்போதுமே நடிகர்களுக்கு தான் முக்கித்துவம் அளிக்கப்படும். நடிகைகள் என்றுமே டூயட் மட்டுமே பாடுவர். ஒரு சில படங்களில் மட்டுமே நடிகைகள் முக்கியத்துவம் பெற்றிருப்பர்.

தற்போதைய சினிமாவிலும் இதே நிலை தான். ஆனால், பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நிலையினை உடைத்தவர் நடிகை நயன்தாரா. 2015 ஆம் ஆண்டு “மாயா” என்ற படத்தின் மூலம் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படத்தில் நடித்தார். அந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி படம் பார்க்க வந்தவர்களை கண் இமைக்க மறக்க வைத்திருப்பார். இந்த அப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் நடித்தார்.

இதன் காரணமாக அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் ஆமிந்தது. அடுத்தடுத்து, டோரா, கொலையுதிர் காலம், இமைக்க நொடிகள், அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்:

அதே போல் தான் அவர் தற்போது நடித்துள்ள “மூக்குத்தி அம்மன்” திரைப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை காமடி நடிகரும், இயக்குனருமான பாலாஜி இயக்கியுள்ளார்.

அவர் ஏற்கனவே எல்.கே.ஜி படத்தை இயக்கியுள்ளார்.அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது “மூக்குத்தி அம்மன்”படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் இந்த தீபாவளிக்கு (நவம்பர் 14) ஆம் தேதி ஆன்லைன் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியினை நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது நயன்தாரா ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -