HBD நயன்தாரா – விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸில் வெட்கத்தால் முகம் சிவந்த லேடி சூப்பர் ஸ்டார்!!

0

நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை நள்ளிரவு பார்ட்டி, கேக் கட்டிங், வான வேடிக்கை என வேற லெவலில் அவரது காதலர் விக்னேஷ் சிவன் கொண்டாடியுள்ளார்.

கொண்டாட்டத்தில் காதலர்:

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெருமிதத்தோடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.  இவர் தனது 37 வது பிறந்தநாளை இன்று (18 நவம்பர் 2021) கொண்டாடுகிறார். இதையடுத்து, பல்வேறு திரை பிரபலங்களுக்கும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது காதலியான நயன்தாராவுக்கு வேற லெவெல் சர்பிரைஸை அவரது காதலன் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். அதாவது நள்ளிரவு 12 மணிக்கு வாணவேடிக்கையுடன், பார்ட்டி கொடுத்து இவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அது மட்டுமில்லாமல்,  Nayan, லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட இரண்டு கேக் வெட்டி கொண்டாடி நயன்தாரா, விக்னேஷ் சிவனை கட்டியணைத்து நன்றி சொல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here