நயன்தாராவ இப்போதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. Open ஆக சொல்லிய விக்னேஷ் சிவன்!!

0

கொரோனா தொற்று முடிந்தவுடன் நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.

சிம்புவின் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பின்னர் இவர் இயக்கிய நானும் ரௌடி தான் படம் பயங்கர வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். நானும் ரௌடி தான் படத்திலிருந்தே  விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாகவே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர்.

தற்போது ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனிடம், நீங்கள் நயன்தாராவை எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் இந்த கொரோனா தொற்று முடிந்தவுடன் நயன்தாராவை திருமணம் செய்யவிருப்பதாக பதில் கூறியுள்ளார். இதனால் நயனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here