நீங்க ரொம்ப அழகு டியர் – நயனின் திருமண உடையணிந்த பிக்பாஸ் பிரபலத்தை புகழ்ந்து தள்ளிய விக்கி!!

0
நீங்க ரொம்ப அழகு டியர் - நயனின் திருமண உடையணிந்த பிக்பாஸ் பிரபலத்தை புகழ்ந்து தள்ளிய விக்கி!!

நயன்தாராவின் திருமண உடையணிந்து, போட்டோ எடுத்து பதிவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தியை, விக்னேஷ் சிவன் நீங்க ரொம்ப அழகு டியர் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

விக்கி வாழ்த்து:

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தாய்லாந்துக்கு, ஹனிமூன் சென்று திரும்பிய ஜோடி தற்போது  மீண்டும் ஸ்பெயினுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், நயன்தாரா தனது திருமணத்தில் அணிந்திருந்த அழகிய மெரூன் உடை போன்று தானும் உடை அணிந்து, பிக் பாஸ் பிரபலம் ஆர்த்தி அண்மையில் போட்டோ வெளியிட்டு இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, என்ன கொடுமை இது என அவரே கலாய்த்து இருந்தார். இந்த போட்டோ மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இந்த போட்டோவுக்கு பதிலளித்துள்ளார். அதாவது, “நீங்க ரொம்ப அழகு டியர் ஆர்த்தி” என  அந்த போட்டோவுக்கு பதில் அளித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், விக்னேஷ் சிவனே  இந்த போட்டோவுக்கு வாழ்த்திட்டாரே என கமெண்ட்களை பறக்க விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here