நயன் விக்கி திருமணத்திற்கு புதிய சிக்கல் – முக்கிய பிரபலத்தால் வந்த பிரச்சனை! போலீசில் புகார்!!

0
நயன் விக்கி திருமணத்திற்கு புதிய சிக்கல் - முக்கிய பிரபலத்தால் வந்த பிரச்சனை! போலீசில் புகார்!!
நயன் விக்கி திருமணத்திற்கு புதிய சிக்கல் - முக்கிய பிரபலத்தால் வந்த பிரச்சனை! போலீசில் புகார்!!

அண்மையில் தங்களது திருமணம் குறித்த செய்தியாளர் சந்திப்பில்  விக்னேஷ் சிவன் பங்கேற்றார். அங்கிருந்த செய்தியாளர் ஒருவரை அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தாக்கியதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பு புகார் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரது திருமணம் ஜூன் 9 ஆம் தேதியான நாளை சென்னை மகாபலிபுரத்தில் இந்து முறைப்படி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், ஒரு சில திரைப்பிரபலங்கள் மற்றும் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பிரபல தொலைக்காட்சி நிருபர் ஆனந்தன் என்பவரை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

மேலும் அவரோடு சேர்த்து, அவரது  ஆதரவாளர்கள்  இரண்டு பேர் தன்னை தாக்கி கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாக கூறியுள்ளார். இதையடுத்து, நிருபர் ஆனந்தன் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் உதவியாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நயன் விக்கி திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்பட்ட இந்த சலசலப்பு நயன் விக்கி மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here