கடைசி நேரத்தில் இடமாற்றமான நயன், விக்கி திருமணம் – இணையத்தில் வெளியான பகீர் தகவல்!!

0

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம், திருப்பதியில் உள்ள மடம் ஒன்றில் நடப்பதாக இருந்த நிலையில், திடீரென மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

 பகீர் தகவல் :

நட்சத்திர காதல் ஜோடிகளான, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திருமணம் முடித்த கையோடு, சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்விற்கு திரை பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைக்க ஜோடிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதியில் உள்ள மடம் ஒன்றில்  திருமணத்தை நடத்த முதலில், ஜோடிகள் திட்டமிட்டிருந்தனர். தற்போது திடீரென சென்னைக்கு, திருமண விழா மாற்றப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது. அதாவது, நிகழ்வில் மணமக்கள் தரப்பில் இருந்து 150 பேருக்கு மேல் கலந்து கொள்ள உள்ளதாக, கூறப்பட்டது. இதனால், தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்து விட்டார்களாம். அதனால்தான் திருமணத்தை, மகாபலிபுரத்தில் நடத்த ஜோடி திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here