நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், திருமணம் முடித்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தபோது விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விசாரணை நடத்த முடிவு :
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு இருவரும், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள சென்றனர். அப்போது, திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ள தடைகளை மீறி அங்குள்ள நான்கு மாட வீதிகளில் போட்டோசூட் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போக, காலில் செருப்பு அணிந்து கோயில் பிரகாரங்களில் நடந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேவஸ்தான நிர்வாகம், தடைகளை மீறி செயல்பட்டவர்கள் மீதும், அதை தடுக்காத அலுவலர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. திருமணம் முடித்த கையோடு, சர்ச்சையில் சிக்கியுள்ள நயன் விக்கி குறித்த இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்