இப்படி ஒன்னு என் வாழ்க்கையில் நடந்ததே இல்ல., நயன் செய்கையால் கண்ணீர் மழையில் விக்கி!!

0

தனது கணவர் பிறந்த நாளை முன்னிட்டு, நயன்தாரா அவருக்கு கொடுத்த சர்ப்ரைஸ் காட்சிகளால் விக்கி கண்ணீர் மழையில் நனைந்த, சுவாரசியங்கள் அரங்கேறியது.

சுவாரசிய காட்சி :

தமிழ் திரையுலகின் முன்னணி ஜோடிகளான, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தேனிலவு, ஜாலி ட்ரிப் என வாழ்க்கையை முழுவதுமாக கொண்டாடி வரும் இந்த தம்பதி, தற்போது துபாய் புர்ஜ் கலிப்பாவுக்கு விரைந்துள்ளனர். நயன் தனது கணவர், விக்கியின் பிறந்தநாளை அங்குள்ள உயரமான கட்டிடத்தின் கீழ் நின்று கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

விக்கியின் அம்மா தங்கையை வரவழைத்து, நள்ளிரவு பார்ட்டி, கேக் கட்டிங் என தனது காதல் கணவரின் பிறந்தநாளை அசத்தியுள்ளார். இதுகுறித்து பதிவிட்ட விக்னேஷ் சிவன் , என் தங்கம், என் மனைவி எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதே இல்லை, எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்போது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here