நவராத்திரி நான்காவது நாள் பூஜை – கூஷ்மாண்டா வழிபாடு!!

0
கூஷ்மாண்டா
கூஷ்மாண்டா

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அம்பாளை மூன்று நாமங்களாக பாவித்து வழிபட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நான்காவது நாளாக கூஷ்மாண்டா வடிவ துர்க்கையை வணங்கும் முறையை இப்பதிவில் காண்போம்.

கூஷ்மாண்டா

நவராத்திரி என்பதன் பொருள் 9 இரவுகள் ஆகும். இந்த ஒன்பது இரவுகளில் அசுரனை அழிக்க அம்பாள் விரதமிருந்து வழிபட்டதே இந்த நவராத்திரி விழா ஆகும். அன்று அசுரனை அழிக்க அம்பாள் கடைபிடித்த விரதத்தை இப்பொழுது நம்மில் உள்ள அசுர குணங்களை அழிக்க வழிபடுகிறோம். முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியை வழிபடுகிறோம் கடைசி 2 நாட்கள் சரஸ்வதியை வழிபடுகிறோம். ஒன்பதாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அதாவது இதுவரை மேற்கொண்ட விரதத்தின் வெற்றியாக இந்த நாள் கொண்டப்படுகிறது.

கூஷ்மாண்டா
கூஷ்மாண்டா

இப்பொழுது நவராத்திரியின் நான்காவது நாளான கூஷ்மாண்டா துர்க்கையை வழிபடுவது வாழ்வில் சிறப்பை தரும். கூஷ்மாண்டா என்பதன் பொருள் தன் புண் சிரிப்பில் உலகை உண்டாக்குபவள். கூஷ்மாண்டா என்றால் பூசணிக்காய் என்றும் பொருள். பூசணிக்காய் என்றால் இந்த அம்பாளுக்கு மிகவும் பிரியம். பூசணிக்காயை திருஷ்டிக்காக பயன்படுத்துவர். இதனால் தீவினை மற்றும் கண் திருஷ்டி போன்றவற்றை நம்மிடம் நெருங்காமல் பாதுகாப்பாள் கூஷ்மாண்டா துர்க்கை. மேலும் சுக்கிர திசை அதிர்ஷ்டத்தை பெற இந்த அம்பாளின் அருள் நமக்கு கண்டிப்பாக தேவை.

lord-shukra-navagraha
lord-shukra-navagraha

நவராத்திரியின் நான்காவது தினமான இன்று முழு அரிசியை எடுத்துக் கொண்டு அதில் கோலமிட்டு அம்பிகைக்கு பொட்டு வைத்து, பன்னீர் தெளித்து மலர்களால் அலங்கரித்து நெய்வேத்தியமாக கதம்ப சாதம் படைத்து வழிபட்டால் நோய்கள் நீங்கி கடன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் சுக்கிர பகவானின் முழு அருளும் இந்த தேவியின் மூலம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here