இயற்கை முறையில் ஹேர் கலரிங் – வீட்லயே செய்யலாம் வாங்க!!

0

இன்றைய நவீன உலகத்தில் இருக்கும் இளம் தலை முறையினர் தங்களோட தலைமுடியை கலர்கலரா மாத்திக்கிறத்துக்கு ஆசைப்படுறாங்க. இதுக்காக நிறைய பணத்தை அழகு நிலையங்களுக்கு செலவு பண்றாங்க. இதன் மூலம் அவங்களோட தலைமுடியின் கலர் மாறினாலும், அவங்க தலை முடியின் ஆரோக்கியம் ரொம்பவே கெட்டுப் போயிருது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால ரொம்ப சின்ன வயதிலேயே நிறைய தலைமுடி பிரச்சனைய சந்திக்க வேண்டி உள்ளது. ஆசைப்பட்ட மாதிரி தலைமுடியின் கலரை வீட்டுலயே ஈஸியா இயற்கை முறையில் எப்படி மாத்தலாம்னு பாக்கலாம் வாங்க. இந்த முறைல கலரிங் செஞ்சீங்கன்னா உங்க தலை முடியின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

பீட்ரூட் கலரிங் :

பீட்ரூட்ல் இரும்புசத்தும், கேரட்ல் ஆன்டிஆக்சைடும் உள்ளது. இதன் மூலம் நமது தலைமுடியை சிவப்பு நிறமா மாத்திக்கலாம். பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் நன்றாக பேஸ்ட் பத்திற்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் தலையில் பூசிக்கொள்ள வேண்டும். அரைமணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பூ கொண்டு தலையை அலசிக் கொள்ளலாம். இப்போது தலை முடி இளம் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும்.

டீத்தூள் கலரிங் :

முதலில் டீத்தூள் அல்லது காப்பித்தூளை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு ஆற வைத்திருக்கும் டிகாஷன் ஐ தலைமுடியின் மேல் ஊற்ற வேண்டும். இதன் பிறகு தண்ணீர் ஊற்றி அலசக் கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் தலை முடியின் நிறம் அழகான சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும்.

மருதாணி:

மருதாணியை தலை முடிக்கு பயன்படுத்துவதால் நிறம் மாறுவதோடு மட்டுமில்லாமல், தலைமுடிக்கு அதிக அளவில் ஊட்டமளிக்கிறது. முதலில் மருதாணியை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஷாம்பூ வைத்து அலச வேண்டும். தலைவலி உள்ளவர்கள் 1 மணி நேரத்தில் அலசி விடலாம்.

குங்குமப்பூ :

சிறிதளவு குங்குமப்பூவை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் ஆறிய பிறகு, தலையின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். காய்ந்த பிறகு அலசிக் கொள்ளலாம். குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள் தலை முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here