தேசிய நெடுஞ்சாலையில் இனி வாகனங்கள் 100 கிமீ வேகத்தில் செல்ல தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

தேசிய நெடுஞ்சாலைகளில் இனி வாகனங்கள் இதுவரை அனுமதிக்கப்பட்ட 100 கிமீ வேகத்தில் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய அறிவிப்பு:

மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை வாகனங்கள் மணிக்கு 100கி மீ வேகத்தில் செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் இந்த வேகம் குறித்த வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அதாவது, காஞ்சிபுரம் பகுதியில் சாலை விபத்தில்  பல் மருத்துவர் ஒருவர் சிக்கியதை அடுத்து, அவர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் மத்திய அரசு அனுமதித்துள்ள வேகத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இது குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்த போது அதிக வேகம் என்பது உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதற்கு சமம் என்றும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினர்.  மேலும் எஞ்சின் செயல்பாட்டை அதிகரிக்க வேகம் அதிகரிக்கபட்டதாக மத்திய அரசு கூறிய விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.  இது மட்டுமல்லாமல், அந்த வேகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இந்த வழக்கின் வாதங்களை ஆராய்ந்து ஒரு முக்கிய அறிவுரையை மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.  அதாவது இனி வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும் எனவும், அதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.  இதனை அடுத்து, இந்த புதிய நிர்ணயம் செய்யப்பட்ட அறிவிப்பை நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here