கில்லி விஜயவே பிட் பண்ண தமிழக அணி.., அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தல், அடுத்த போட்டி இவங்க கூடவா??

0

குஜராத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக மகளிர் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தமிழக பெண்கள் அணி

36 தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் தமிழகத்தின் ஆடவர் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர். ஆடவர்களுக்கான A பிரிவில் இடம் பிடித்த தமிழக அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றதால் லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஆனால் அதற்கு மாறாக B பிரிவில் இடம் பிடித்த மகளிர் அணி 3 போட்டிகளில் விளையாடியது. இந்த போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெண்கள் அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அணி அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியை எதிர்கொள்ள உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் தமிழக அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த அணியில் உள்ள வித்ரா இந்திரஜித், சத்யபிரியா, ஆர்.ஆஷா, கே.ஸ்வேதா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே இவர்கள் தமிழக அணியை இறுதி போட்டி அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here