3 நாளில் 25 பதக்கங்கள்.., தமிழக வீரர்களால் கிடைத்த ஜாக்பாட்.., இன்னும் பதக்க வேட்டை தொடருமா??

0

தேசிய விளையாட்டு போட்டியில் மேலும் பல பதக்கங்களை குவித்து தமிழக வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

தமிழக வீரர்கள்

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட 6 நகரங்களில் அரங்கேறி வருகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு நாளும் தமிழக வீரர் வெளிப்படுத்தும் ஆட்டம் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.

அதன்படி இன்று நடைபெற்ற போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் சுப்ரமணிய சிவா 5.31 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். மேலும் இவர் தாண்டிய இந்த தூரம் தேசிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது. சிவா இதற்கு முன்னர் இருந்த 5.30 மீட்டர் என்ற சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தேசிய விளையாட்டு போட்டி தொடங்கி மூன்று நாள் முடிவடைந்து விட்டது. இந்த மூன்று நாட்களில் நடந்த ஆட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அதிக தங்கப் பதக்கங்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here