தேசிய விளையாட்டு 2022.., டென்னிஸ் போட்டி முதல் கிரிக்கெட் போட்டி வரை.., முழு விவரம் உள்ளே!!

0

இந்தியா அளவில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளது.

தேசிய விளையாட்டு 2022:

தேசிய விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இம்மாதம் 27 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கால்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து உட்பட 36 விளையாட்டு போட்டிகள் அரங்கேற உள்ளது. இந்த போட்டிகளுக்கு இந்தியாவில் இருந்து சுமார் 8,000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகள் அனைத்தும் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய ஆறு நகரங்களில் அரங்கேற உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான அனைத்து பணிகளையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த தேசிய விளையாட்டு போட்டிகள் இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது நடைபெற உள்ளது. இதனால் வீரர், வீராங்கனைகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் போட்டிக்காக வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடரில் அரங்கேறும் முதல் போட்டியான வில்வித்தை மற்றும் கோ-கோ ஆட்டம் செப்., 30 ஆம் தேதியும், மல்லாகம்ப் போட்டி அக்டோபர் 7 ஆம் தேதியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி அக்டோபர் 1 ஆம் தேதியும், ஆண்களுக்கான கால்பந்து போட்டி அக்டோபர் 2 ஆம் தேதியும், கபடி போட்டி செப்., 26 ஆம் தேதியும், யோகாசனம் அக்டோபர் 6 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் அரங்கேற்ற உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here