ஆத்தி என்ன ஒரு Jumb., மிரட்டலான ஆட்டத்தால் கிடைத்த தங்கம்.., அதிர்ந்து போன பார்வையாளர்கள்!!

0
ஆத்தி என்ன ஒரு Jumb., மிரட்டலான ஆட்டத்தால் கிடைத்த தங்கம்.., அதிர்ந்து போன பார்வையாளர்கள்!!
ஆத்தி என்ன ஒரு Jumb., மிரட்டலான ஆட்டத்தால் கிடைத்த தங்கம்.., அதிர்ந்து போன பார்வையாளர்கள்!!

குஜராத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு தடகள போட்டியில் தமிழக வீரர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தடகளம்

36 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் 2 ம் நாளான நேற்று பல போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் தடகள பிரிவில் நடைபெற்ற ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் கலந்து கொண்டார். இவர் தனது முதல் முயற்சியிலேயே அதிரடியாக தாண்டி முதலிடம் பிடித்தார். அவர் 16.68 மீட்டர் தூரம் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதே போன்று ஆடவருக்கான 67 கிலோ பளுதூக்குதல் போட்டியில் சுபாஷ் லாஹ்ரே மொத்தம் 275 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த நீலம் ராஜு, ஒடிசாவைச் சேர்ந்த சுசாந்த் சாஹு ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

வசமாக சிக்கிய சிக்கிய சக அணிகள்., கடைசி நேரத்தில் BCCI வச்ச செம ட்விஸ்ட்!!

இதனை தொடர்ந்து பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு போட்டியில் ஹரியானாவின் அர்ஷ்தீப் சிங் மற்றும் ரமிதா ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றனர். இதில் கலந்து கொண்ட தமிழகத்தின் நர்மதா நிதின் மற்றும் ஸ்ரீ கார்த்திக் சபரி ஜோடி வெள்ளி பதக்கம் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here