இந்தியாவில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு “தேசிய நல்லாசிரியர்” விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதில் தமிழகத்தில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதி ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், “தேசிய நல்லாசிரியர்” விருதினை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.
SSC தேர்வர்களே., மத்திய அரசின் ஸ்டெனோகிராபர் பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!