தேசிய விருது நாயகன் மரணம்… ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி!!!

0

கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகராக  இருப்பவர் நடிகர் சஞ்சாரி விஜய்.  இவர் கடந்த ஜூன் 12-ம் தேதி  நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார். பைக் சறுக்கி விடவே விளக்குக் கம்பம் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.இதனால் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்துள்ளார். விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்து உள்ளனர்.

நடிகர் சஞ்சாரி விஜய் திரைக்கு வருவதற்கு முன்பு சஞ்சாரி என்ற  நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர். இவர் 2011-ம் ஆண்டு வெளியான  ‘ரங்கப்பா ஹோக்பிட்னா’ என்ற  படத்தின் மூலம் திரையுலகில் அடி வைத்தவர். ‘கில்லிங் வீரப்பா’, ‘வர்த்தமானா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.   2015 -ம் ஆண்டு வெளி வந்த ‘நான் அவனல்ல, அவளு’ படத்தில் திருநங்கையாக  நடித்ததற்காக  விஜய்க்கு  சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் விஜய் அவர்கள் ஜூன் 12ஆம் தேதி அன்று நண்பருடன் பைக்கில் பயணம் செய்யும் போது,எதிர்பாராத விதமாக பைக் சறுக்கி விளக்குக் கம்பம் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜய் அனுமதிக்கப்பட்டார். மேலும் மூளையின் வலது பக்கமும், தொடையிலும்  அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரது மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை அவருக்கு  பலன் அளிக்காததால்  விஜய் மூளைச்சாவு அடைந்தார்.

இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். நடிகர் விஜய்  கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் பல விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தி வந்துள்ளார். மேலும்  உஸிரே என்ற அமைப்புடன் இணைந்து, கோவிட் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் கிடைக்கவும் உதவியுள்ளார். சஞ்சாரி விஜய்யின் மறைவு கன்னட திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் அவருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here