இந்தியாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக, அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அணி வீரர்கள் பலர் காயங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக, கடந்த மாதத்தில் தொடர் வெற்றிகளை குவித்து அசத்திய பாகிஸ்தான் அணி ஐசிசியின் நம்பர் 1 அணியாக உயரும் அளவுக்கு சிறப்பாக விளையாடியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் தற்போது, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றியது. இதற்கு முக்கிய காரணம், அணியில் உள்ள பல வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதே ஆகும். அதாவது, பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான நசீம் ஷா தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால், உலக கோப்பைக்கான முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து, இமாமுக்கு முதுகு பிடிப்பு, சவுத் ஷகீலுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்ததடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றனர்.