இருந்த ஒன்னும் போச்சா.., பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா.., T20 உலக கோப்பையில் ஏற்பட்ட சிக்கல்!!

0
இருந்த ஒன்னும் போச்சா.., பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா.., T20 உலக கோப்பையில் ஏற்பட்ட சிக்கல்!!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நசீம் ஷா

T20 உலக கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிய கோப்பை தொடரில் பட்டத்தை நழுவவிட்டு பாகிஸ்தான் அணி, T20 உலக கோப்பையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் இவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அணியை சேர்ந்த முக்கிய வீரர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீம் ஷா ஆசிய கோப்பை தொடரில் தனது பந்து வீச்சின் மூலம் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார்.

FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ!!

இதனால் உலக கோப்பை தொடருக்கு முன்னதாகவே அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் கண்டிப்பாக உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே T20 World Cup-ல் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here