பூமிக்கு ஜூலை இறுதியில் காத்திருக்கும் பேராபத்து – நாசா எச்சரிக்கை!!

0

நாசா விண்வெளி மையத்தின் அறிக்கை படி, வரும் ஜூலை 24ஆம் தேதி லண்டனின் கண் எனப்படும் ராட்சத ராட்டினத்தை விட ஒன்னரை மடங்கு பெரிய விண்கல்- லால் உலககிற்கு பேராபத்து ஏற்படலாம் என எச்சரித்து உள்ளது.

விண்கல் 2020ND:

சூரிய மண்டலத்தில் கோள்கள் உருவான பின்னர் மீதம் உள்ள துகள்கள் பால்வெளியில் சுற்றி திரியும். இது பெரும்பாலும் எந்த கோள்களுக்கும் தீமை பயக்காது. ஆனால், ஒரு சில சமயங்களில் நமது கோளின் அளவை விட பெரியதாக இருந்தாலோ அல்லது அதன் சுற்றி திரியும் கோணம் மறுபட்டாலோ கோள்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது. அவ்வாறு 2020 ND என பெயரிடப்பட்டுள்ள விண்கல் நம் பூமிக்கு மிக அருகில் வரும் ஜூலை 24ஆம் தேதி வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.

தீமை விளைவிக்கும் விண்கல்:

ஒவ்வொரு முறை விண்கற்கள் பூமியை நெருங்கும் போதும் ஆராச்சியாளர்கள் அதனை தீமை விளைவிக்கும் தீமை விளைவிக்காது என தரம் பிரிப்பர். அதன் தன்மை அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு பார்க்கையில், இந்த 2020 ND என்ற விண்கல் “தீமை விளைவிக்கும்” என கணிக்கப்பட்டுள்ளது. இது “லண்டன் ஐ” எனப்படும் ராட்சத ராட்டினத்தை விட ஒன்றரை மடங்கு பெரியது என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 விண்கற்கள்:

இந்த பெரும் விண்கல் அல்லாது மேலும், ஜூலை 21 இல் 2020 BF25 என்ற விண்கல்லும் , ஜூலை 24 இல் 2020 ND என்ற விண்கல்லும் , ஜூலை 29 இல் 2020 MX3 என்ற விண்கல்லும் , ஜூலை 31 இல் 2018 PY7 மற்றும் 2007 RFI எனப்படும் இரு விண்கற்களும் பூமியை நெருங்கி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 20202 ND எனப்படும் விண்கல் ஒரு மணி நேரத்திற்கு 48,000 கி.மீ வேகத்தில் நகர்த்தவதாகும் , ஜூலை 24 அன்று நம் பூமியில் இருந்து 5,086,327 கி.மீ தூரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here