நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா – 18 வீரர்கள் தேர்ந்தெடுப்பு!!

0
NASA logo at the Kennedy Space Center. Florida

“ஆர்டெமிஸ்” என்ற திட்டத்தின் கீழ் நாசா விண்வெளி நிலையம் தற்போது இரண்டாவது முறையாக நிலவிற்கு வீரர்களை அனுப்ப உள்ளது. அதற்காக 18 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியும் அளிக்க உள்ளது. இந்திய வம்சாவளியினை சேர்ந்த வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா விண்வெளி நிலையம்:

உலகத்தின் முதல் விண்வெளி நிலையம் தான் நாசா. ஐக்கிய அமெரிக்கா விண்வெளி நிலையமாக நாசா செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சியையும் செய்து கொண்டு வருகின்றது. இந்த அமைப்பு தான் முதன் முதலாக பூமியின் துணை கோளான நிலவில் மனிதனை கடந்த 1969 ஆம் ஆண்டு அனுப்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இரண்டாவது முறையாக நிலவிற்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள நாசா இதற்காக 18 பேரை தேர்ந்தெடுத்துள்ளது. 9 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்திய – அமெரிக்க வம்சாவளியினை சேர்ந்த ராஜா சாரி என்பவரும் இடம் பிடித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் பெற காலஅவகாசம் நீட்டிப்பு!!

இந்த “ஆர்டெமிஸ்” நிகழ்வு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டே நாசா செய்தியினை வெளியிட்டுவிட்டனர். இந்த திட்டத்தில் பங்கேற்க 18,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 18 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரையும் நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. கென்னடி விண்வெளி நிலையத்தில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சில வீரர்கள் வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததால், 5 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here