சமூகம் குறித்த கருத்தை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் விவேக் – பிரதமர் மோடி இரங்கல்!!

0

தமிழ் சினிமாவின் நட்சத்திர நகைச்சுவை நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தற்போது அவரது மறைவிற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் இரங்கல்:

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் தொடக்க காலத்தில் இருந்தே தனது படங்களில் சமூக கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பல நகைச்சுவைகளை செய்து வந்தார். இவர் தனது படங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தாதவாறும் மற்றவர்கள் மனதை புண்படுத்தாதவரும் நகைச்சுவைகளை செய்து வந்தார். இதனால் மக்கள் அனைவராலும் விவேக் மிக வெகுவாக கவரப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிலையில் நேற்று திடிரென்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அவருக்கு பல தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் நாட்டின் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வேளச்சேரியில் தொடங்கியது மறுவாக்கு பதிவு – இரவு 7 மணி வரை நடைபெறுகிறது!!

அதன்படி அவர் கூறியதாவது, விவேக்கின் மரண செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விவேக்கின் நகைச்சுவை, நடிப்பு மக்களை வெகுவாக கவரவைத்தது. மேலும் தனது படங்கள் மூலமாகவும் தனது சொந்த வாழ்க்கை மூலமாகவும் விவேக் பல சமூக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அவரது இழப்பை எண்ணி வாடும் அவரது நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் இரங்கல் என்று தெரிவித்துள்ளார் மோடி. அதேபோல் இலங்கை எம்.பி வேலுசாமி ராதாகிருஷ்ணனும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here