விவசாயிகளுக்கான 8வது தவணை தொகையை வழங்கிய பிரதமர் – காணொளி மூலம் தொடங்கி வைப்பு!!

0
New Delhi, Sep 08 (ANI): Prime Minister, Narendra Modi addressing at the inauguration of the Patrika Gate in Jaipur, through video conferencing in New Delhi on Tuesday. (ANI Photo)

ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை உதவி தொகையாக ரூ.2000 மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது அவர்களுக்கு வழங்கும் நிதியின் 8வது தவணையை பிரதமர் இன்று காணொளி மூலம் துவக்கி வைத்தார்.

மந்திரி கிசான் சம்மான் நிதி:

இந்திய நாட்டின் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தகுதியுடைய விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை வீதம் ஆண்டுக்கு 3 முறை உதவித்தொகையாக ரூ.2000 வழங்கி வருகிறது மத்திய அரசு. இது மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த திட்டத்தின் கீழ் 9.5 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.50 லட்ச கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான 8வது தவணை தொகையை இன்று வழங்குகிறார். இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார். தற்போது 8வது தவணையாக 9.5கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here