வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் – பிரதமர் பேச்சு!!

0
modi speech about agricultural laws
modi speech about agricultural laws

வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியுள்ளார். அதே போல் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அவர்களுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள்:

எப்ஐசிசிஐ அமைப்பின் 93வது ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளை பற்றியும், அவரகள் வாழ்வாதாரத்தை பற்றியும் பேசினார். அவர் கூறியதாவது, “இந்த 2020 ஆம் ஆண்டு நாட்டில் உள்ளவராகலியும் உலகில் உள்ளவர்களையும் பல விதங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. சில காலத்திற்கு பிறகு கொரோனா காலத்தை நினைத்து பார்க்கும் போது நாம் அதனை நம்ப மாட்டோம். தொற்று உண்டான காலத்தில் நாம் தெரியாத எதிரியிடம் போராடினோம். அப்போது உற்பத்தி, போர் தளவாடங்கள், பொருளாதார மீட்சி என பல நிச்சயமற்ற தன்மைகள் நீடித்தன”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“இந்த சூழ்நிலை எதனை நாளிற்கு நீடிக்கும் என்ற கேள்வி நம் மனதில் எழுந்தது. அதே போல் டிசம்பர் மதம் அனைத்தும் மாறின. கடந்த 6 ஆண்டுகளை விட இந்தியாவில் உலக நாடுகள் முதலீடு செய்துள்ளது அதிகரித்துள்ளது. நேரடி அந்நிய முதலீடும் அதிகரித்துள்ளது. னிறைவு இந்தியா என்ற திட்டம் நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் ஊக்குவிக்கிறது”

இன்று சனி மஹாபிரதோஷம் – எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்??

“மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளின் வாழ்வில் பல பயன்கள் கிடைக்கும். விவசாய துறையில் அதிக முதலீடு செய்யப்படும். வேளாண் சட்டம் நாட்டில் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலமாக நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வருமானம் அதிகரிக்கும்” இவ்வாறாக உரை நிகழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here