முதல்வரை கன்னத்தில் அறைவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் – போலீசார் விரைந்து நடவடிக்கை!!

0

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினரான நாராயண் ரானேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நடந்து முடிந்த சுதந்திர தினத்தின் பொழுது நடத்தப்பட்ட ஒரு விழாவில் பேசும்போது, அருகில் உள்ளவர்களிடம் இது எத்தனையாவது சுதந்திர தினம் என கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே தன்னிடம் இக்கேள்வியை கேட்டிறிருந்தால், அவரது கன்னத்தில் அறைந்து இருப்பேன் என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே அவர்கள் பற்றி மத்திய அமைச்சர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு தரப்பினர் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்த புகார்களும் எழுந்தது. ஆனால் தன்மீது எவ்வித தவறும் இல்லை என பதில் விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே.

இதனிடையே நாசிக் போலீசார் நாராயண் ரானே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது செய்திகள் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here