பிரமாண்ட படத்துடன் போட்டி போடும் தனுஷின் ‘நானே வருவேன்’ – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

0
பிரமாண்ட படத்துடன் போட்டி போடும் தனுஷின் 'நானே வருவேன்' - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!
பிரமாண்ட படத்துடன் போட்டி போடும் தனுஷின் 'நானே வருவேன்' - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானே வருவேன்:

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியடைந்தது. மேலும் இப்படம் 100 கோடி வசூலை அள்ளி உள்ளது. அவர் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு காத்துக்கொண்டிருந்த திரைப்படம் நானே வருவேன்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இப்படத்தை செல்வராகவன் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். நடிகர் தனுஷ் – செல்வராகவன் காம்போவில் வெளிவந்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை போன்ற படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த காம்போவில் இணைந்து இசையமைத்து உள்ளார் யுவன் சங்கர் ராஜா.

வயசு 52 க்கு மேல ஆச்சு., ஆனா இப்பவும் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு வருது – பகீர் கிளப்பிய ரஜினி பட நடிகை!!

இதனை தொடர்ந்து அண்மையில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், புரோமஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது படம் வெளியிடு தேதி குறித்து தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அதாவது வருகிற செப் 29ம் தேதி நானே வருவேன் திரைப்படம் திரை காண இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருகிற 30 தேதி இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படத்தை முதல் நாளே வெளியிட இருக்கிறார்கள் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here