தனுஷ் படத்தின் ரன்னிங் டைம், சென்சார் சான்றிதழ் வெளியீடு – படும் குஷியில் ரசிகர்கள்!!

0
தனுஷ் படத்தின் ரன்னிங் டைம், சென்சார் சான்றிதழ் வெளியீடு - படும் குஷியில் ரசிகர்கள்!!

விரைவில் வெளியாக இருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நானே வருவேன்:

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த எல்லா திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். அவர்களை குஷி படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் அமைந்தது. இப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றி அடைந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் ஆரவாரத்தோடு வெயிட் செய்யும் திரைப்படம் நானே வருவேன். இப்படத்தை செல்வராகவன் இயக்குவது மட்டுமின்றி தனுசுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னர் இவர்களது காம்போவில் வெளிவந்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது.

சூர்யாவின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்ததே இந்த வில்லன் நடிகர் தானா?? வெளியான உண்மை சம்பவம்!!

இந்நிலையில் மீண்டும் இந்த காம்போ நானே வருவேன் படத்தில் சேர்ந்துள்ளதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நானே வருவேன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என்றும், படத்தின் சென்சார் யு/எ சான்றிதழை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் வருகிற செப் 29ம் தேதி திரை காண இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here