யம்மியான “நண்டு மசாலா” ரெசிபி – வீக்எண்டு ஸ்பெஷல்!!

0

நண்டு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு பொருள் என்று கூட சொல்லலாம். அந்த விதத்தில் அதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று சிலருக்கு தெரியாது. நண்டினை வைத்து ஈஸியான அதே சமயம் சுலபமான ரெசிபியான “நண்டு மசாலா” செய்முறை குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • நண்டு – 1 கிலோ
  • சீரகம் – 2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
  • மிளகு – 2 தேக்கரண்டி
  • மிளகாய் – 2
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • ஏலக்காய் – 3
  • கிராம்பு – 2
  • கடுகு – தாளிக்க
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், நண்டினை நன்றாகவும் சுத்தமாகவும் கழுவி எடுத்து கொள்ளவும். பின், ஒரு சட்டியினை காய வைக்க வேண்டும். பின்பு சட்டி காய்ந்ததும் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்க்கவும். இதனை நன்றாக வதக்கவும். பின்பு, இதில் நறுக்கி வைத்த வெங்காயத்தினை சேர்த்து அதனை நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பாரதி, கண்ணம்மாவின் காதலை புரியவைக்க சௌந்தர்யா – கோவத்தில் கொந்தளிக்கும் வெண்பா!!

Crab Masala Recipe - Nandu Varuval Recipe - Yummy Tummy

பின்பு, இந்த கலவையில் தக்காளியை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விடவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை மூடி வைத்து விடவும். பின்பு, இதில் தேங்கய் துருவலை சேர்ந்து நன்றாக மை போல அரைக்க வேண்டும். இந்த கலவையினை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், மீண்டும் ஒரு சட்டியினை காய வைத்து அதில் கடுகு, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்க வேண்டும். இவற்றை வறுத்ததும் அதில் இந்த கலவையினை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி முடி வைத்து விட வேண்டும். ஒரு 15 நிமிடங்கள் கழித்து இந்த கலவையில் நண்டினை சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு 15 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். அவ்ளோ தான்!!!

சூடான “நண்டு மசாலா” தயார்!!வீக்கெண்டை என்ஜாய் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here